மழையுடனான வானிலை அதிகரிக்கும் சாத்தியம்

மழையுடனான வானிலை அதிகரிக்கும் சாத்தியம்

by Staff Writer 19-10-2019 | 3:39 PM
Colombo (News 1st) நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளை (20) முதல் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறித்த மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீட்டர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும். வடகிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் 75 மில்லிமீட்டர் வரையிலான மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

ஏனைய செய்திகள்