உலகக்கிண்ண ரக்பி: இங்கிலாந்தும் நியூஸிலாந்தும் அரை இறுதிக்கு தகுதி

உலகக்கிண்ண ரக்பி: இங்கிலாந்தும் நியூஸிலாந்தும் அரை இறுதிக்கு தகுதி

உலகக்கிண்ண ரக்பி: இங்கிலாந்தும் நியூஸிலாந்தும் அரை இறுதிக்கு தகுதி

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2019 | 7:38 pm

Colombo (News 1st) உலகக்கிண்ண ரக்பி தொடரில் இங்கிலாந்தும் நியூஸிலாந்தும் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

ஜப்பானில் நடைபெறும் உலகக்கிண்ண ரக்பி தொடரில் காலிறுதி சுற்று இன்று ஆரம்பமானது.

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் முதல் காலிறுதிப் போட்டியில் விளையாடின.

ஒட்டாவா மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் 40-16 எனும் புள்ளிகள் கணக்கில் இங்கிலாந்து வெற்றியீட்டி அரை இறுதிக்குள் நுழைந்தது.

இங்கிலாந்து பெற்ற 40 புள்ளிகளில் 4 ட்ரைகள், 4 கோல்கள், 4 பெனால்டிகள் என்பன அடங்கும்.

இதேவேளை, நடப்பு சாம்பியனான நியூஸிலாந்து இன்று நடைபெற்ற இரண்டாவது காலிறுதிப் போட்டியில் அயர்லாந்தை எதிர்கொண்டது.

போட்டியில் முதல் பகுதியை 22-0 எனும் கணக்கில் நியூஸிலாந்து கைப்பற்றியது.

நியூஸிலாந்து இரண்டாம் பகுதியில் மேலும் 24 புள்ளிகளை சுவீகரித்து ஆதிக்கத்தை தக்கவைத்தது.

அயர்லாந்து அணியால் 14 புள்ளிகளையே பெற முடிந்தது.

அதற்கமைய 46 -14 எனும் புள்ளிகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றிபெற்று அரை இறுதியை உறுதி செய்தது.

நியூஸிலாந்து 7 ட்ரைகள், 4 கோல்கள், ஒரு பெனால்டியுடன் 46 புள்ளிகளைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்