ஆதரவாளர்களை அறிமுகப்படுத்துமாறு ஜனாதிபதி வேட்பாளர்களிடம் மிலிந்த மொரகொட கோரிக்கை

ஆதரவாளர்களை அறிமுகப்படுத்துமாறு ஜனாதிபதி வேட்பாளர்களிடம் மிலிந்த மொரகொட கோரிக்கை

ஆதரவாளர்களை அறிமுகப்படுத்துமாறு ஜனாதிபதி வேட்பாளர்களிடம் மிலிந்த மொரகொட கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2019 | 7:13 pm

Colombo (News 1st) தமது ஆதரவாளர்களை வாக்காளர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்துமாறு முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

இலங்கை அரசியலில் நல்ல எண்ணம் கொண்ட தலைவர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களால் அழிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த தலைவர்களை சூழவுள்ள அரசியல் ஆதரவாளர்கள், ஆலோசகர்கள், வர்த்தகர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரால் அவர்களது நற்பெயர் களங்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்கள் பதவிக்கு தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர், அவர்கள் தம்மை சூழவுள்ளவர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராத பட்சத்தில் அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்த பின்னர் அதனை செய்வார்கள் என நம்பிக்கை வைப்பது பயனற்றது எனவும் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்