கொழும்பின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு

by Staff Writer 18-10-2019 | 6:50 PM
Colombo (News 1st) கொழும்பின் பல பகுதிகளில் நாளை (19) இரவு 9 மணி தொடக்கம் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, நாளை இரவு 9 மணி தொடக்கம் கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை, கொழும்பு – 09 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படவுள்ளது. கொழும்பு மாநகர நீர் விநியோக மற்றும் கழிவுநீர் செயற்றிட்டத்தின் அத்தியாவசிய புனரமைப்பு காரணமாக நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.