கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் நிதியுதவி

கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் 1.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

by Staff Writer 18-10-2019 | 5:30 PM
Colombo (News 1st) வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்கான உடன்படிக்கை கிளிநொச்சியில் இன்று கைச்சாத்திடப்பட்டதுடன், 1.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கியுள்ளதாக இலங்கையிலுள்ள ஜப்பான் தூதரகம் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது. இலங்கையை 2020 ஆம் ஆண்டில் கண்ணிவெடி அற்ற நாடாக பிரகடனப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2003 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடிகளை அகற்றும் செயற்பாடுகளுக்கு ஜப்பான் அரசாங்கம் தொடர்ந்தும் தமது ஒத்துழைப்புகளை வழங்கி வருவதாக இலங்கையிலுள்ள ஜப்பான் தூதரகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.