யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்ப்பலகை தொடர்பில் விமல் வீரவன்ச விமர்சனம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்ப்பலகை தொடர்பில் விமல் வீரவன்ச விமர்சனம்

எழுத்தாளர் Bella Dalima

18 Oct, 2019 | 8:39 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்ப்பலகை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தேர்தல் மேடையில் விமர்சனங்களை முன்வைத்தார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச, பலாலி சர்வதேச விமான நிலையத்தின் பெயர்ப்பலகையில், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவதாக சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளது. மூன்றாவதாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. அரச மொழிக் கொள்கைக்கு அமைய, சிங்கள மொழியே முதலில் இருக்க வேண்டும். தமிழ் மொழி இரண்டாவதாகக் காணப்பட வேண்டும். தற்போது மொழிக் கொள்கைகள் இல்லாது போயுள்ளன, என குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் பெயர்ப்பலகை தொடர்பில் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தாலும், அவர் ஆதரவு வழங்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ். மாவட்ட கட்சி அலுவலகத்தின் பெயர்ப்பலகையிலும் முதலில் தமிழிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்