கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
கொழும்பின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

18 Oct, 2019 | 6:50 pm

Colombo (News 1st) கொழும்பின் பல பகுதிகளில் நாளை (19) இரவு 9 மணி தொடக்கம் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளை இரவு 9 மணி தொடக்கம் கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை, கொழும்பு – 09 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.

கொழும்பு மாநகர நீர் விநியோக மற்றும் கழிவுநீர் செயற்றிட்டத்தின் அத்தியாவசிய புனரமைப்பு காரணமாக நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்