சுற்றுலா கைத்தொழில்துறை மூலம் 2.3Bn டொலர் வருமானம்

சுற்றுலா கைத்தொழில் துறை மூலம் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்

by Bella Dalima 17-10-2019 | 5:53 PM
Colombo (News 1st) இந்த வருடத்தின் முதல் 8 மாதங்களில் சுற்றுலா கைத்தொழில் துறையின் மூலம் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த வருடமும் இதேபோன்று வருமானம் கிடைத்ததாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சுற்றுலா கைத்தொழில் துறையில் 270 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்ததுடன், கடந்த வருடம் இதே காலப்பகுதியில் 376 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்ததாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.