சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் இன்று

சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் இன்று

by Staff Writer 17-10-2019 | 8:31 AM
Colombo (News 1st) சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் இன்று (17) அனுஷ்டிக்கப்படுகின்றது. வறுமை என்பது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையாகும். அத்துடன், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் கூட குறைவான தன்மை காணப்படுதலும் வறுமை என வரையறுக்கப்படுகின்றது. 'குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் வறுமையைப் போக்குவதற்கு அதிகாரத்துடன் ஒன்றாக செயற்படுவோம்' என்ற எண்ணக்கருவில் உலகெங்கும் இன்று, சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இலங்கையில் அதிக வறுமையுள்ள மாவட்டமாக கிளிநொச்சி காணப்படுவதோடு, குறைந்தளவு வறுமையான மாவட்டமாக கொழும்பு காணப்படுகிறது. எமது நாட்டில் 1.8 மில்லியன் வறிய மக்களில் 1.5 மில்லியன் பேர் கிராமங்களிலுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. 2019 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 600 மில்லியனுக்கும் குறைவான மக்கள் கடுமையான வறுமையில் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், உலகில் அதிகளவு வறுமையால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆபிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளிலேயே வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்