கறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது

கறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது

by Staff Writer 17-10-2019 | 11:23 AM
Colombo (News 1st) உலகின் பாரிய கறுப்பு இணைய சந்தையைப் பயன்படுத்தி 38 நாடுகளைச் சேர்ந்த 337 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல மில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்ட 2 இலட்சத்திற்கும் அதிக காணொளிகளைக் கொண்ட குறித்த கறுப்பு இணையத்தளம் கடந்த வருடத்தில் பிரித்தானியா முன்னெடுத்த விசாரணைகளை தொடர்ந்து முடக்கப்பட்டு அதன் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், குறித்த இணையத்தளத்தை பயன்படுத்திய 337 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரித்தானியா, அயர்லாந்து, அமெரிக்கா, தென் கொரியா, ஜேர்மனி, ஸ்பெய்ன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், செக் குடியரசு மற்றும் கனடா உள்ளிட்ட 38 நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், குறித்த இணையத்தளத்தின் நிர்வாகியான 23 வயதுடைய Jong Woo Son என்பவருக்கு எதிராக அமெரிக்க அதிகாரிகள் 9 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளனர்.