கரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் பிரேஸில் வசமானது

கரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது 

by Chandrasekaram Chandravadani 17-10-2019 | 10:25 AM
Colombo (News 1st) கரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டத்தை பிரேஸில் நான்காவது தடவையாக வெற்றிகொண்டுள்ளது. இதற்கான இறுதிப் போட்டியில் இத்தாலி தோல்வியடைந்துள்ளது. கரப்பந்தாட்ட உலக சாம்பியன்ஷிப் கரப்பந்தாட்டப் போட்டிகள் ஜப்பானின் - ஹிரோஷிமா நகரில் நடைபெற்றன. இதன் இறுதிப் போட்டியில் பிரேஸில் மற்றும் இத்தாலி அணிகள் விளையாடின. போட்டியில் 3 - 0 எனும் கணக்கில் பிரேஸில் வெற்றிபெற்று உலக சாம்பியன் மகுடத்தை சூடியுள்ளது. 25 - 20, 25 - 22, 25 - 22 எனும் புள்ளிகள் கணக்கில் 3 சுற்றுகளையும் பிரேஸில் அணி கைப்பற்றியது. பிரேஸில் 2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் விழாவில் தங்கப்பதக்கம் வென்றதுடன் அப்போதும் இறுதிப் போட்டியில் இத்தாலி தோல்வியடைந்துள்ளது. இதற்கு முன்னர் 2003, 2007 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் கரப்பந்தாட்ட உலக சாம்பியனான பிரேஸிலுக்கு இது நான்காவது உலக சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.