அனைத்து விவசாயிகளுக்கும் இலவச உரம் வழங்குவதாக சஜித் பிரேமதாச வாக்குறுதி

by Bella Dalima 17-10-2019 | 8:31 PM
Colombo (News 1st) புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசாரக் கூட்டங்கள் இன்று அனுராதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளில் நடைபெற்றன. அமைச்சர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கிலான பிரசாரக் கூட்டம் ஒன்று இன்று கெக்கிராவ பகுதியிலும் நடைபெற்றது. இந்த பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாச, அப்பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் காட்டு யானைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வாக முதல் 6 மாதங்களுக்குள் யானை வேலிகளை அமைத்துத் தருவதாகவும் அழிவடையும் செய்கைகளுக்கு நட்ட ஈட்டைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதாகவும் வாக்குறுதியளித்தார். ஒரு தரப்பு விவசாயிகளுக்கு மாத்திரமன்றி, நெற்செய்கையாளர்களுக்கும் மேட்டு நில பயிர் செய்கையாளர்களுக்கும் மரக்கறி செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கும் பழச்செய்கையில் ஈடுபடுவோருக்கும் இலவசமாக உரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.