மாடுகளை விட பெண்கள் மீது அதிகக் கவனம் செலுத்துங்கள்: மோடிக்கு அறிவுரை வழங்கிய அழகி

மாடுகளை விட பெண்கள் மீது அதிகக் கவனம் செலுத்துங்கள்: மோடிக்கு அறிவுரை வழங்கிய அழகி

மாடுகளை விட பெண்கள் மீது அதிகக் கவனம் செலுத்துங்கள்: மோடிக்கு அறிவுரை வழங்கிய அழகி

எழுத்தாளர் Bella Dalima

17 Oct, 2019 | 4:04 pm

நாகலாந்தில் மிஸ் கோஹிமா (Miss Kohima 2019 ) அழகிப்போட்டியில் கலந்து கொண்ட அழகி, பிரதமர் மோடிக்கு அறிவுரை வழங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மிஸ் கோஹிமா அழகிப் போட்டியில் விக்கானுவோ சச்சு (Vikuonuo Sachu) என்ற 18 வயது பெண்ணும் கலந்துகொண்டிருந்தார்.

அழகிப் போட்டியின் கேள்வி பதில் சுற்றின் போது நடுவர்கள் அவரிடம் ‘பிரதமர் மோடியுடன் பேசுவதற்கு அழைக்கப்பட்டால் அவரிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்’ என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் ‘மாடுகளை விட பெண்கள் மீது அதிகக் கவனம் செலுத்துங்கள்’ என்று அறிவுரை வழங்குவேன் என தெரிவித்தார்.

இந்த பதிலைக் கேட்ட நடுவர்களும் பார்வையாளர்களும் பலமாக சிரித்தனர்.

இப்போட்டியில் விக்கானுவோ சச்சு இரண்டாமிடத்தைப் பெற்றார்.

20 வயதான Khrienuo Liezietsu என்பவர் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்