குர்திஷ் ஒன்றும் தேவ தூதர்கள் அல்ல – ட்ரம்ப்

குர்திஷ் ஒன்றும் தேவ தூதர்கள் அல்ல – ட்ரம்ப்

குர்திஷ் ஒன்றும் தேவ தூதர்கள் அல்ல – ட்ரம்ப்

எழுத்தாளர் Staff Writer

17 Oct, 2019 | 11:03 am

Colombo (News 1st) சிரியாவில் துருக்கி ஊடுருவியிருப்பது தமது எல்லைக்கு உட்பட்ட பகுதியல்ல எனவும் குர்திஷ் ஒன்றும் தேவ தூதர்கள் அல்ல எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அத்துடன், அந்தப் பிரச்சினையில் அமெரிக்கர்கள் உயிர்களை இழக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துருக்கி தாக்குதல் தொடங்கும் முன்புவரை ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்க கூட்டுப்படையில் குர்திஷ் அங்கம் வகித்தது.

“அமெரிக்காவின் வெள்ளை மாளிகை ஒன்றும் பொலிஸ் முகவர் அல்ல” என செய்தியாளர்களிடம் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க படையினர் தாயகம் திரும்ப வேண்டிய நேரமிது எனவும் அவர் கூறினார்.

இந்நிலையில் முட்டாள்தனமாக செயற்பட வேண்டாம் என துருக்கிய ஜனாதிபதிக்கு ட்ரம்ப் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

சிரியாவில் துருக்கி தாக்குதல்களை ஆரம்பித்த தினத்தில் ட்ரம்ப் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சிரியாவில் தமது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த துருக்கி இணக்கம் தெரிவிக்காவிடின் மேலதிக தடைகள் தவிர்க்கமுடியாதது என அமெரிக்க திறைசேரி செயலாளர் Steven Mnuchin தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்