by Staff Writer 17-10-2019 | 1:55 PM
Colombo (News 1st) கந்தப்பளை - பார்க் தோட்டத்தின் கந்தப்பளை பிரிவில் அமைந்துள்ள 2 வீடுகளில் இன்று (17) காலை தீ பரவியுள்ளது.
இன்று காலை 7 மணியளவில் தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து தீயைக் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
தீ விபத்தினால் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், கந்தப்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.