ஐரோப்பிய கால்பந்தாட்ட விருது: தங்கக்காலணி விருதை சுவீகரித்தார் மெஸி

ஐரோப்பிய கால்பந்தாட்ட விருது: தங்கக்காலணி விருதை சுவீகரித்தார் மெஸி

ஐரோப்பிய கால்பந்தாட்ட விருது: தங்கக்காலணி விருதை சுவீகரித்தார் மெஸி

எழுத்தாளர் Staff Writer

17 Oct, 2019 | 1:27 pm

Colombo (News 1st) ஐரோப்பிய கால்பந்தாட்ட விருது வழங்கல் விழாவில் தங்கக்காலணி விருதை பார்ஸிலோனா கழக அணி வீரரான லியோனல் மெஸி (Lionel Messi) வென்றுள்ளார்.

2018 – 2019 ஆம் ஆண்டு பருவ காலத்தில் ஆற்றல்களை வெளிப்படுத்திய ஐரோப்பிய வீரர்களுக்காக இந்த விருது வழங்கல் விழா நடத்தப்படுகிறது.

இந்தப் போட்டிப் பருவ காலத்தில் அதிக கோல்களைப் போட்ட வீரருக்கான தங்கக்காலணி விருது ஸ்பெய்னின் பார்ஸிலோனா கழக அணி வீரரான லியோனல் மெஸிக்குக் கிடைத்துள்ளது.

அவர் இந்தப் பருவ காலத்தில் ஸ்பெய்ன் லீக் கால்பந்தாட்டத்தில் 36 கோல்களைப் போட்டுள்ளார்.

மெஸி தங்கக்காலணியை வெல்லும் ஆறாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

போர்த்துக்கல் நாட்டு நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தங்கக்காலணி விருதை 4 தடவைகள் வென்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்