அரச முகாமைத்துவத்திற்கான நிறுவனத்தை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி

அரச முகாமைத்துவத்திற்கான நிறுவனத்தை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி

அரச முகாமைத்துவத்திற்கான நிறுவனத்தை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி

எழுத்தாளர் Staff Writer

17 Oct, 2019 | 6:41 am

Colombo (News 1st) இலங்கை கடன் முகாமைத்துவம் தொடர்பில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதுடன் இந்தப் பணிக்காக தனியான நிறுவனம் ஒன்று இருப்பதன் தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, அரச முகாமைத்துவத்திற்காக அரச முகாமைத்துவம் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நிதி அமைச்சின் கீழ் ஸ்தாபிப்பதற்காக கொள்கை ரீதியில் அனுமதியை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன், அரச கடன் முகாமைத்துவ சட்ட திருத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கும் திறைசேரி செயலாளரின் தலைமையில் ஐவரைக் கொண்ட அரச கடன் முகாமைத்துவ குழுவொன்றை அமைப்பதற்கும் அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்