அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு

எழுத்தாளர் Staff Writer

17 Oct, 2019 | 10:34 pm

Colombo (News 1st) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் வவுனியாவில் இன்று நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜயதிலக்க உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கையை பிரதேச மட்டத்தில் எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்