வனவிலங்கு நிதியத்தை மூட அமைச்சரவை அனுமதி

வனவிலங்கு நிதியத்தை மூட அமைச்சரவை அனுமதி

by Staff Writer 16-10-2019 | 4:14 PM
Colombo (News 1st) வனவிலங்கு நிதியத்தை மூடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அறக்கட்டளைச் சட்டத்தின் ஒதுக்கீட்டிற்கு அமைவாக ஸ்தாபிக்கப்பட்ட வனவிலங்கு நிதியத்தின் மூலம் வனஜீவராசிகளின் பாதுகாப்பிற்காக தற்போது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, வனஜீவராசிகளுக்கான நிதியம் மூடப்படுவதுடன், அதன் அனைத்து சொத்துக்களையும் வனஜீவராசிகள் காப்புறுதி திணைக்களத்திற்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சேவையில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ள ஊழியர்களுக்கு இழப்பீடு மற்றும் பணிக்கொடை வழங்கவும் சேவையிலிலிருந்து விலக விரும்பாத பணியாளர்களை வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிதியத்திற்கு சொந்தமான ரந்தெனிகல பயிற்சி மத்திய நிலையத்தை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் பயிற்சி நிலையமாக தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.