சந்தேகத்திற்கிடமான பொதிகள் தொடர்பில் வதந்தி 

சந்தேகத்திற்கிடமான பொதிகள் தொடர்பில் வதந்தி 

by Staff Writer 16-10-2019 | 11:24 AM
Colombo (News 1st) மட்டக்குளி மற்றும் கம்பஹா மிரிஸ்வத்த பகுதிகளில் பாடசாலைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பொதியொன்று உள்ளதாகப் பரப்பப்படும் வதந்தியை நம்ப வேண்டாம் என பொலிஸ் மற்றும் இராணுவம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள தேவாலயத்தை அண்மித்துள்ள பாடசாலைக்கு அருகில், நேற்றிரவு சொகுசு ரக காரொன்று இயந்திரக் கோளாறுக்கு உள்ளானதால், அதன் உரிமையாளர், அந்த இடத்திலேயே காரை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இன்று காலை அந்தப் பாடசாலைக்கு வருகைதந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர், நிறுத்தப்பட்ட சொகுசு காரை கண்ணுற்று அச்சமடைந்துள்ளனர். பொலிஸாருக்கு இது குறித்து தெரியவந்ததைத் தொடர்ந்து, அந்தப் பகுதிக்கு பொலிஸார் விரைந்து சென்றதுடன், காரின் உரிமையாளரும் அந்த சந்தர்ப்பத்தில் வருகை தந்துள்ளார். சந்தேகத்திற்கிடமான எந்தவொரு பொருளும் அங்கில்லை. இது குறித்து வதந்திகள் பரப்பப்படுகின்றன. அதனை நம்ப வேண்டாம்
என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இராணுவ ஊடகப்பேச்சசாளர் மேஜர் ஜெனரல் சுமித் அத்தபத்து இது குறித்து தெரிவிக்கையில்,
மட்டக்குளி மற்றும் கம்பஹா - மிரிஸ்வத்த பகுதிகளில் உள்ள பாடசாலைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பொதியொன்று, குண்டொன்று உள்ளதாக வதந்திகள் பரப்பப்படுகின்றன. இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அது வதந்தி.