பசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

திவிநெகும நிதி மோசடி: பசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

by Staff Writer 16-10-2019 | 5:00 PM
Colombo (News 1st) திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 2991 மில்லியன் ரூபா நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணை அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஆர்.குருசிங்க இன்று விடுமுறையில் உள்ளதால், விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி சஷி மகேந்திரன் உத்தரவிட்டுள்ளார். திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான நிதியை பயன்படுத்தி கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கூரைத்தகடுகள் விநியோகித்தமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.