வரலாறு காணாத காட்டுத் தீ; சர்வதேச நாடுகளிடம் உதவி கோரும் லெபனான்

வரலாறு காணாத காட்டுத் தீ; சர்வதேச நாடுகளிடம் உதவி கோரும் லெபனான்

வரலாறு காணாத காட்டுத் தீ; சர்வதேச நாடுகளிடம் உதவி கோரும் லெபனான்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

16 Oct, 2019 | 9:37 am

Colombo (News 1st) லெபனானில் வரலாறு காணாத வகையில் காட்டுத் தீ பரவி வருகின்றது.

காட்டுத் தீயினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த 8 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகின்றது.

கடந்த 2 நாட்களில் வடக்கு மற்றும் தென் பகுதிகளில் நூற்றுக்கும் அதிகமான இடங்களில் தீ பரவியுள்ளதாக லெபனான் சிவில் பாதுகாப்புப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், வேகமாகப் பரவி வருகின்ற காட்டுத் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக, சர்வதேச நாடுகளின் உதவி கோரியுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் Raya El Hassan தெரிவித்துள்ளார்.

கடுமையான வெப்பத்தினாலும் அனல் காற்றினாலும் லெபனானின் மலைப்பகுதிகளில் காட்டுத் தீ வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், Beirut மற்றும் Sidon ஆகிய பகுதிகள் அதிகளவில் காட்டுத் தீ காரணமாக கடும் புகையினால் பாதிப்படைந்துள்ளதுடன் தன்னார்வ தீயணைப்பு வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்