by Staff Writer 16-10-2019 | 3:39 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணத்திலுள்ள தேவாலயமொன்றுக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் - மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த 33 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.