மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் அதிகரிப்பு

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் அதிகரிப்பு

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Oct, 2019 | 7:46 am

Colombo (News 1st) மலையக ரயில் மார்க்கத்தினூடான ரயில் சேவைகளை அதிகரிப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்பிரகாரம் கொழும்பு, கோட்டை – கண்டி, கொழும்பு, கோட்டை – பதுளை மற்றும் கொழும்பு, கோட்டை – மாத்தளை வரையான ரயில் சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளன.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகள் இதற்குப் பயன்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்

இதற்காக 9 ரயில் பெட்டிகள் இறக்குமதி செய்யப்படுவதுடன் இதில் 4 பெட்டிகளை இவ் வருட இறுதிக்குள் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்புக்கும் கண்டிக்கும் இடையில் தற்போது 12 ரயில் சேவைகளும் கொழும்புக்கும் பதுளைக்கும் இடையில் 8 ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

ரயில்வே திணைக்களத்தின் திட்டத்தின் முதல்கட்டமாக “தெனுவர மெனிக்கே” எனும் பெயரிலான நகரங்களுக்கு இடையிலான ரயிலொன்றை இம்மாத இறுதிக்குள் சேவையில் இணைத்துக் கொள்ளவுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்