நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழை

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழை

by Staff Writer 16-10-2019 | 9:43 AM
Colombo (News 1st) மேல், சப்ரகமுவ, தென், வட மேல், மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் அநுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் இன்று (16) 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் இன்று காலை வேளையில் மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேநேரம், புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்துள்ளதுடன், மதுரங்குளி ஶ்ரீ மோபுரம் கிராமத்தில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். மலையகப் பகுதிகளிலும் நேற்று மாலை வேளை முதல் மழை பெய்ததாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவித்துளள்னர். இந்தநிலையில், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் பலத்த மழை பெய்யலாம் எனவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்