ஓய்வின் பின்னர் ஜனாதிபதிக்கு உத்தியோகப்பூர்வ இல்லம்

ஓய்வின் பின்னர் ஜனாதிபதிக்கு உத்தியோகப்பூர்வ இல்லம்

ஓய்வின் பின்னர் ஜனாதிபதிக்கு உத்தியோகப்பூர்வ இல்லம்

எழுத்தாளர் Staff Writer

16 Oct, 2019 | 9:59 am

Colombo (News 1st) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது பயன்படுத்தும் கொழும்பு – 7, மஹகமசேகர மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை அவர் ஓய்வுபெற்றதன் பின்னரும் அவருக்கு வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நேற்று (15) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த குறிப்பாணைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற ஜனாதிபதிக்கு அரசியலமைப்புக்கு அமைவாக வழங்கப்படும் சலுகைகளுக்கு மேலதிகமாக மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையை ஈடுபடுத்தவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

நாட்டில் போதைப்பொருளை ஒழிப்பதற்காக ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் பாரிய செயற்றிட்டங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்