ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைதான 13 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைதான 13 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைதான 13 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Oct, 2019 | 7:01 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் காத்தான்குடி மற்றும் அம்பாறையில் கைது செய்யப்பட்ட 13 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் I.N. ரிஸ்வான் முன்னிலையில் சந்தேகநபர்கள் 13 பேரும் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு சந்தேகநபர் சார்பில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரின் பரிந்துரைகளைப் பெற்றதன் பின்னர் குறித்த பிணை கோரிக்கை தொடர்பில் ஆராயப்படும் என இதன்போது நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 13 பேரின் விளக்கமறியலே நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்