ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த முறைப்பாடுகளை விசாரிக்க குழுவொன்று நியமனம்

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த முறைப்பாடுகளை விசாரிக்க குழுவொன்று நியமனம்

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த முறைப்பாடுகளை விசாரிக்க குழுவொன்று நியமனம்

எழுத்தாளர் Staff Writer

16 Oct, 2019 | 8:24 am

Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக பிரதி பொலிஸ்மா அதிபரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, அது தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவிற்கு இதுவரை 65 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடும் இதில் உள்ளடங்குவதாக ஆணைக்குழுவின் செயலாளர் H.M.B.P. ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்யும் முறை தொடர்பில் ஆராய்வதற்காக இன்று (16) ஆணைக்குழு கூடவுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வாவின் தலைமையில் ஐவரடங்குய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த மாதம் 22 ஆம் திகதி ஐவரடங்கிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்