ஊழல், மோசடியற்றவர்கள் அடங்கிய அமைச்சரவை நியமிக்கப்படும்: நலின் பண்டார உறுதி

ஊழல், மோசடியற்றவர்கள் அடங்கிய அமைச்சரவை நியமிக்கப்படும்: நலின் பண்டார உறுதி

எழுத்தாளர் Bella Dalima

16 Oct, 2019 | 8:43 pm

Colombo (News 1st) ஊழல், மோசடி அற்றவர்கள் உள்ளடங்கிய அமைச்சரவை நியமிக்கப்படும் என அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் நலின் பண்டார உறுதியளித்தார்.

ஜயமஹ மாவத்தகமயில் நேற்று (15) அவர் இதனைக் கூறினார்.

அரசாங்கத்திற்கு பொருத்தமற்றவர்கள் எமது அரசாங்கத்திலும் காணப்பட்டனர். அவர்கள் தொடர்புபடாத அரசாங்கத்தை உருவாக்குவதற்கே நாம் முயற்சிக்கின்றோம். திருட்டுப் பெயர் இல்லாத, ஊழல் அற்ற, தூய்மையான அரசியல்வாதிகளைக் கொண்ட அமைச்சரவையும் அரசாங்கமுமே எமக்கு வேண்டும். அரசியல்வாதிகள் வெறுக்கப்பட்ட யுகமே இது. புதிய பயணத்திற்காக முன்நிற்பதற்கே இன்று பெரும்பாலான இளைஞர்கள் தயாராகியுள்ளனர்

என இராஜாங்க அமைச்சர் நலீன் பண்டார தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்