இந்தியாவில் நடைபெறவுள்ள T20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் முத்தையா முரளிதரன்

இந்தியாவில் நடைபெறவுள்ள T20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் முத்தையா முரளிதரன்

இந்தியாவில் நடைபெறவுள்ள T20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் முத்தையா முரளிதரன்

எழுத்தாளர் Staff Writer

16 Oct, 2019 | 3:59 pm

Colombo (News 1st) அடுத்த ஆண்டில் இந்தியாவில் நடைபெறவுள்ள T20 கிரிக்கெட் தொடரில் இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் உள்ளிட்ட பல வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

சாலை விழிப்புணர்வை வலியுறுத்தி நடத்தப்படும் இந்த தொடருக்கு The Road Safety World Series என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களை இப்போட்டியில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த T20 தொடர் அடுத்த ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்