நாட்டில் சுகாதாரத் தேவைக்கான உரிமையை சமமாக உறுதி செய்வதே எனது கொள்கை: அனுரகுமார திசாநாயக்க

by Staff Writer 15-10-2019 | 9:22 PM
Colombo (News 1st) தேசிய மக்கள் சக்தியின் சுகாதார கொள்கை தொடர்பில் தௌிவூட்டும் நிபுணர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தலைமையில், மன்றக்கல்லூரியில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளில் தெரிவு செய்யப்பட்ட துறைகளுக்கான கொள்கைகள் பகிரங்கப்படுத்தப்பட்டன. இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க பின்வருமாறு உரை நிகழ்த்தினார்
2016 ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக 5146 நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர். அதாவது, நாளாந்தம் சுமார் 14 பேரளவில் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். சிறுநீரக நோயினால் நாளாந்தம் சுமார் 6 பேரளவில் உயிரிழக்கின்றனர். உயிரிழக்கும் சமூகமொன்றை எமக்காக உருவாக்கியுள்ளனர். உயிரிழக்கும் முறையை நாம் தெரிவு செய்ய வேண்டும். நோய்வாய்ப்பட்ட இனமொன்றுடனான அரசாங்கத்தின் ஊடாக, உலகில் அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்க முடியாது. ஒருவர் வாழ வேண்டுமா இல்லையா என்பது, அவர்களிடம் நிதியுள்ளதா இல்லையா என்பதற்கு அமைய தீர்மானிக்கப்படுவது நியாயமல்ல.
நாட்டில் சுகாதாரத் தேவைக்கான உரிமையை சமமாக உறுதி செய்வதே தமது கொள்கையின் அடிப்படை நோக்கம் எனவும் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.