யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பரீட்சார்த்த விமானம் தரையிறங்கியது

by Staff Writer 15-10-2019 | 4:10 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பரீட்சார்த்த விமானமொன்று தரையிறங்கியுள்ளது. சென்னையிலிருந்து இன்று முற்பகல் குறித்த விமானம் வருகை தந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. விமானத்தில் வருகை தந்தவர்கள் தெல்லிப்பளையிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளது. அன்றைய தினம் சென்னையிலிருந்து பயணிகளை ஏற்றிய விமானம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க குறிப்பிட்டார்.