யானைகளின் உயிரிழப்பு தொடர்பிலான அறிக்கை இந்த வாரம்

யானைகளின் உயிரிழப்பு தொடர்பிலான அறிக்கை இந்த வாரம்

யானைகளின் உயிரிழப்பு தொடர்பிலான அறிக்கை இந்த வாரம்

எழுத்தாளர் Staff Writer

15 Oct, 2019 | 9:11 am

Colombo (News 1st) ஹபரணை – திகம்பத்தஹ, தும்பிக்குளம் வனப்பகுதியில் 7 யானைகள் உயிரிழந்தமைக்கான காரணம் என்னவென்பது தொடர்பிலான அறிக்கை இந்த வாரத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த யானைகளின் உடல்களில் எடுக்கப்பட்ட மாதிரிகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் பின்னர் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்காக 7 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஹபரணை – திகம்பத்தஹ தும்பிக்குளம் வனப்பகுதியில் யானைகள் உயிரிழந்தமைக்கு அவற்றின் உடலில் நஞ்சு கலந்தமையே காரணம் என கடந்த வாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

யானைகள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக வனஜீவராசிகள் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட குழு இதனை அறிவித்திருந்தது.

யானைகள் உயிரிழந்தமைக்கான காரணம் என்னவென்பதை கண்டறிவதற்காக, யானைகளின் உடல் மாதிரிகள், பேராதனை பல்கலைக்கழக மிருக வைத்திய பீடத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்