by Staff Writer 15-10-2019 | 1:54 PM
Colombo (News 1st) சீன இறக்குமதிப் பொருட்கள் மீது புதிய வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்டீவன் மெனூஸின் (Steven Mnuchin) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதியளவில் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நிறைவுசெய்யப்படாதவிடத்து சுமார் 156 பில்லியன் டொலர் பெறுமதியான இறக்குமதிகளுக்கு புதிய வரிகளை விதிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்படுமென தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் ஸ்டீவன் மெனூஸின் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இவரது எச்சரிக்கை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நம்பிக்கைக்கு முரணாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அத்துடன், இந்த இணக்கப்பாடுகள் இறுதி உடன்படிக்கையாகுமா என்ற ஐயப்பாடு காணப்படுவதாகவும் அவை குறிப்பிட்டுள்ளன.
இந்தநிலையில், கடந்த வாரம் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய புதிதாக விதிக்கப்படவிருந்த வரிகள் நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.