ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் 65 இற்கும் அதிக முறைப்பாடுகள்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் 65 இற்கும் அதிக முறைப்பாடுகள்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் 65 இற்கும் அதிக முறைப்பாடுகள்

எழுத்தாளர் Staff Writer

15 Oct, 2019 | 6:59 am

Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவிற்கு இதுவரையில் 65 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்த முறைப்பாடுகளில் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை செய்த முறைப்பாடும் உள்ளடங்குவதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.பி.பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகள் இந்த வாரமளவில் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் புதன்கிழமை ஆணைக்குழுவின் அதிகாரிகள் இணைந்து கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முறைப்பாடுகளை நேரடியாக பெற்றுக்கொள்ளும் இறுதித் திகதி நேற்றுடன் (14) நிறைவடைந்த நிலையில் தபால் மூலம் வரும் முறைப்பாடுகள் தொடர்ந்து்ம் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

கடந்த 4 ஆம் திகதி முதல் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளப்படும் நடவடிக்கை ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்