8 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த நடவடிக்கை

8 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த நடவடிக்கை

8 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

14 Oct, 2019 | 4:27 pm

Colombo (News 1st) குளியாப்பிட்டிய சாராநாத் கல்லூரி உள்ளிட்ட 8 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, பொலன்னறுவை மாவட்டத்தின் திம்புலாகல, விலயாய மத்திய மகா வித்தியாலயம், தோபாவெவ மகா வித்தியாலயம், திவுலன்கடவல மத்திய மகா வித்தியாலயம், பக்கமூண மஹசென் வித்தியாலயம், பொலன்னறுவை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம், அம்பாறை உஹன மகா வித்தியாலயம் மற்றும் கம்பஹா ஹேனெகம மத்திய மகா வித்தியாலயம் என்பவற்றை தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்