4/21 தாக்குதல்: முறைப்பாடுகளை ஏற்கும் பணி நிறைவு

4/21 தாக்குதல்: முறைப்பாடுகளை ஏற்கும் பணி இன்றுடன் நிறைவு

by Staff Writer 14-10-2019 | 2:58 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முறைப்பாடுகளை ஏற்கும் பணிகள் இன்றுடன் (14) நிறைவடைகின்றன. ஆணைக்குழுவின் முறைப்பாடுகளை ஏற்கும் பணிகள் கடந்த 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வாவின் தலைமையில் இந்தப் பணிகள் இடம்பெற்றன. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி நிஷ்சங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஸ, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் W.M.H.M. அதிகாரி ஆகியோர் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த மாதம் 22 ஆம் திகதி, ஐவரடங்கிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அதிகாரத் துஷ்பிரயோகம், பொருட்படுத்தாமை, பின்வாங்குதல், பொறுப்புணர்ந்து செயற்படாமை உள்ளிட்ட காரணிகளால் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவங்கள், மீண்டும் நிகழாமையை உறுதிப்படுத்துவதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பரிந்துரிப்பதே ஜனாதிபதி ஆணைக்குழுவின் முக்கிய கடற்பாடாகும். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விரைவானதும் பக்கசார்பற்றதுமான விசாரணைகளை நடாத்துதல், பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்பட்டவர்கள் மற்றும் அமைப்புகள் தொடர்பில் ஆராய்வதும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடாகும்.

ஏனைய செய்திகள்