மத்திய நெடுஞ்சாலைத் திட்டத்திற்காக தேசிய வங்கிகளிடமிருந்து கடன்

மத்திய நெடுஞ்சாலைத் திட்டத்திற்காக தேசிய வங்கிகளிடமிருந்து கடன்

மத்திய நெடுஞ்சாலைத் திட்டத்திற்காக தேசிய வங்கிகளிடமிருந்து கடன்

எழுத்தாளர் Staff Writer

14 Oct, 2019 | 3:11 pm

Colombo (News 1st) மத்திய நெடுஞ்சாலைத் திட்டத்திற்காக நாட்டின் 3 தேசிய வங்கிகளிடம் இருந்து 60 பில்லியன் ரூபாவைக் கடனாகப் பெறும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நெடுஞ்சாலைத் திட்டத்தின் சில இடங்களுக்கு வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்காமல் போனதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான இரண்டாம் கட்டத்துக்காக மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகிய 3 தேசிய வங்கிகளிடம் இருந்து நிதி பெறப்படவுள்ளது.

மத்திய நெடுஞ்சாலைத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் முடிவடையவிருந்த போதிலும், தற்போது ஏற்பட்டுள்ள தாமதத்தையடுத்து இந்தத் திட்டம் எதிர்வரும் மே மாதம் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்