பந்துவீச்சாளர்களின் தரப்படுத்தலில் அஸ்வின் முன்னேற்றம்

பந்துவீச்சாளர்களின் தரப்படுத்தலில் அஸ்வின் முன்னேற்றம்

பந்துவீச்சாளர்களின் தரப்படுத்தலில் அஸ்வின் முன்னேற்றம்

எழுத்தாளர் Staff Writer

14 Oct, 2019 | 7:10 pm

Colombo (News 1st) டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரப்படுத்தலில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் ஏழாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரப்படுத்தல் இன்று (14) வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் 792 புள்ளிகளுடன் ரவிச்சந்திரன் அஸ்வின் ஏழாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இதற்கு முன்னர் அவர் அவர் பத்தாமிடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தார்.

தென்னாபிரிக்காவுக்கு எதிராக நிறைவுக்கு வந்த 2 டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் 14 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

தென்னாபிரிக்காவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ககிசோ ரபாடா டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்தில் நீடிப்பதுடன் அவுஸ்திரேலியாவின் பெட் கம்மிங்ஸ் முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை, டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் பட்டியலில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி புள்ளிகள் அடிப்படையில் முன்னேற்றமடைந்துள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் விராட் கோஹ்லி 899
புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் இரட்டைச்சதம் விளாசிய நிலையில் 254 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.

இந்த ஆற்றலுக்கு அமைவாக விராட் கோஹ்லி 936 புள்ளிகளை ஈட்டி அதே இரண்டாமிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 937 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்