குருநாகல் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான மின் இணைப்பு துண்டிப்பு

குருநாகல் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான மின் இணைப்பு துண்டிப்பு

குருநாகல் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான மின் இணைப்பு துண்டிப்பு

எழுத்தாளர் Staff Writer

14 Oct, 2019 | 2:44 pm

Colombo (News 1st) பலத்த காற்றினால் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதால் குருநாகல் மாவட்டத்தின் பல பகுதிகளில் 75000 இற்கும் அதிகமான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

வாரியபொல, நிக்கவரெட்டிய, கொபேய்கனே, கல்கமுவ உள்ளிட்ட பல பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கம்பிகளை இணைப்பதற்காக இலங்கை மின்சார சபையின் மேலதிக அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல பகுதிகளில் பிரதான மின்கடத்திகளில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளமையால், மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவருவதில் தாமதம் ஏற்படும் எனவும் மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்