by Staff Writer 13-10-2019 | 3:10 PM
Colombo (News 1st) காலி வீதியின் தெஹிவளை மேம்பாலத்தில் மோட்டார்சைக்கிள் பயணிப்பதற்குத் தடை விதிக்கபபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்கிஸ்ஸ பிரிவின் வீதிப் பாதுகாப்புக் குழு மற்றும் இரத்மலானை வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தெஹிவளை மேம்பாலத்தின் ஊடாக மோட்டார்சைக்கிள் பயணிப்பதால், விபத்துக்கள் சம்பவிப்பதை கவனத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்காரணமாக, எதிர்வரும் காலங்களில் தெஹிவளை மேம்பாலத்தில் மோட்டார்சைக்கிள் பயணிப்பது முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.