ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 84 முறைப்பாடுகள்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 24 மணி நேரத்தில் 84 முறைப்பாடுகள்

by Staff Writer 13-10-2019 | 7:35 PM
Colombo (News 1st) கடந்த 24 மணித்தியாலங்களில் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 84 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நேற்று (12) பிற்பகல் 4.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் வன்முறை நடவடிக்கைகள் தொடர்பில் 2 முறைப்பாடுகளும் சட்டத்தை மீறியமை தொடர்பில் 73 முறைப்பாடுகளும் ஏனைய சம்பவங்கள் தொடர்பில் 3 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், கடந்த 8ஆம் திகதியிலிருந்து இதுவரை 459 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.