ஹகிபிஸ் சூறாவளி காரணமாக இன்றைய ரக்பி போட்டி இரத்து

ஹகிபிஸ் சூறாவளி காரணமாக இன்றைய ரக்பி போட்டி இரத்து

ஹகிபிஸ் சூறாவளி காரணமாக இன்றைய ரக்பி போட்டி இரத்து

எழுத்தாளர் Staff Writer

13 Oct, 2019 | 10:30 am

Colombo (News 1st) ஜப்பானைத் தாக்கியுள்ள ஹகிபிஸ் சூறாவளி காரணமாக 2019 உலகக்கிண்ண ரக்பி போட்டிகளில் இன்று (13) நடைபெறவிருந்த நமீபியா மற்றும் கனேடிய அணிகளுக்கு இடையிலான போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளது.

இம்முறை போட்டிகளில் B பிரிவில் நடைபெறவிருந்த இந்தப் போட்டி இன்று ஜப்பானின் கமாய்ஷி நகரில் நடைபெறவிருந்தது.

ஹகிபிஸ் சூறாவளி தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தே போட்டியை இரத்து செய்வதற்குத் தீர்மானித்ததாக சர்வதேச ரக்பி சம்மேளனம் அறிக்கையூடாக தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இன்று நடைபெறவுள்ள அமெரிக்கா – டொன்கா அணிகளுக்கு இடையிலான போட்டியும் வேல்ஸ் – உருகுவே அணிகளுக்கு இடையிலான போட்டியும் ஜப்பான் – ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியும் திட்டமிட்டவாறு நடைபெறும் என சர்வதேச ரக்பி சம்மேளனம் அறிவித்துள்ளது.

ஜப்பானைத் தாக்கியுள்ள ஹகிபிஸ் சூறாவளி காரணமாக 2019 உலகக்கிண்ண ரக்பி தொடரில் இதுவரை 3 போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்