பெரிய வெங்காயத்தின் விலையில் பாரிய மாற்றம்

பெரிய வெங்காயத்தின் விலையில் பாரிய மாற்றம்

பெரிய வெங்காயத்தின் விலையில் பாரிய மாற்றம்

எழுத்தாளர் Staff Writer

13 Oct, 2019 | 7:43 pm

Colombo (News 1st) நாட்டில் பெரிய வெங்காயத்திற்கு வரலாற்றிலேயே கிடைக்காதளவு ஆகக்கூடிய விலை கிடைத்துள்ளது.

உற்பத்தியாளர்களிடமிருந்து ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 150 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுவதாக மாத்தளை மாவட்ட விவசாயப் பிரதிப் பணிப்பாளர் எம்.பி.கே. தொடன்வல தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பெரிய வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டமை இந்த விலை அதிகரிப்பிற்குக் காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கான உற்பத்திச்செலவு 50 ரூபாவுக்கும் 52 ரூபாவுக்கும் இடைப்பட்டதாக அமைந்திருந்த நிலையில், அதிகரித்த விலையில் இடம்பெற்ற கொள்வனவினால் உற்பத்தியாளர்கள் நன்மையடைந்துள்ளனர்.

அதேவேளை அடுத்த ஆண்டில் 1200 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பெரிய வெங்காயம் செய்கையிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்