by Bella Dalima 12-10-2019 | 9:26 PM
Colombo (News 1st) சிங்கள பௌத்த பேரினவாதிகள் ஒருபோதும் இந்திய தேசத்திற்கு விசுவாசமாக இருக்கப்போவதில்லை என்பதை இந்தியா தௌிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டார்.
இந்தியா எவ்வளவு தான் தமிழர்களை அழித்து, தமிழர்களின் உரிமைகளை கைவிடச் செய்து, சிங்களத் தலைமைகளுக்கு பின்னால் சென்றாலும் அவர்கள் சீனாவின் பின்னால் தான் செல்வார்கள் என செல்வராசா கஜேந்திரன் மேலும் தெரிவித்தார்.
ஆகவே, அவ்வாறான அணுகுமுறையைக் கைவிட்டு தமிழ் தேசத்தை அங்கீகரிக்குமாறும் தமிழ் தேசம் எப்பொழுதும் இந்தியாவிற்கு விசுவாசமாக இருக்கும் என ஆணித்தரமாகக் கூறிக்கொள்வதாகவும் செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டார்.
யாழ் - கொக்குவில் - பிரம்படி பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த போதே அவர் இவ்விடயங்களைக் கூறினார்.