இராணுவ ஆட்சியா, சிநேகப்பூர்வ நாடா என மக்களே தீர்மானிக்க வேண்டும்: சஜித் பிரேமதாச

by Bella Dalima 12-10-2019 | 8:35 PM
Colombo (News 1st) புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மற்றும் மேற்கு கொழும்பு தொகுதி கூட்டம் கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது. கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். இக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, உலகில் சிறந்த நாடாக இலங்கையை உருவாக்குவதாக வாக்குறுதியளித்தார். அடியாட்களையும் உதவியாட்களையும் வைத்து நாட்டை நிர்வகிக்க முடியாது என குறிப்பிட்ட சஜித் பிரேமதாச, மக்கள் மத்தியில் சென்று அவர்களின் மனங்களை வென்று சேவையாற்றும் திறமை தமக்கு இருப்பதாகக் கூறினார். நாட்டை இராணுவ ஆட்சியின் கீழ் கொண்டு வருவதா அல்லது சிநேகப்பூர்வ நாட்டினை உருவாக்குவதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.