வலல்லாவிட்ட பிரதேச சபையின் உபதலைவர் உள்ளிட்ட மூவர் கைது

வலல்லாவிட்ட பிரதேச சபையின் உபதலைவர் உள்ளிட்ட மூவர் கைது

வலல்லாவிட்ட பிரதேச சபையின் உபதலைவர் உள்ளிட்ட மூவர் கைது

எழுத்தாளர் Staff Writer

12 Oct, 2019 | 5:13 pm

Colombo (News 1st) ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட வலல்லாவிட்ட பிரதேச சபையின் உபதலைவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வெலிப்பன்ன பொலிஸாரால் நேற்று (11) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

எவ்வாறாயினும் சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு எதிராக மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, கடந்த 8 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 375 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இதற்கமைய, 9 வன்முறைச் சம்பவங்களும் சட்ட விதிமீறல்கள் தொடர்பில் 360 சம்பவங்களும் வேறு விடயங்கள் தொடர்பில் 6 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்