மல்லாகத்தில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

மல்லாகத்தில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

மல்லாகத்தில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

12 Oct, 2019 | 3:39 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – மல்லாகத்தில் கிணற்றிலிருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மல்லாகம் – குழமங்காலை பகுதியை சேர்ந்த 40 வயதான நடராஜா ஜெயாகரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த நபர் உள்ளிட்ட மேலும் சிலர் மதுபோதையில் இருந்துள்ளதுடன், அவர் நிலை தடுமாறி கிணற்றில் வீழ்ந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

கிணற்றில் வீழ்ந்த நபரை காப்பாற்ற முயன்ற நிலையில், ஏனையோரால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு மல்லாகம் நீதவான் வருகை தந்ததுடன், சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்