ஏஞ்சலினா ஜோலிக்கு குரல் கொடுக்கும் ஐஸ்வர்யா ராய்

ஏஞ்சலினா ஜோலிக்கு குரல் கொடுக்கும் ஐஸ்வர்யா ராய்

ஏஞ்சலினா ஜோலிக்கு குரல் கொடுக்கும் ஐஸ்வர்யா ராய்

எழுத்தாளர் Bella Dalima

12 Oct, 2019 | 5:36 pm

Maleficent Mystery of Evil என்ற ஹாலிவுட் படத்திற்காக நடிகை ஏஞ்சலினா ஜோலிக்கு ஐஸ்வர்யா ராய் குரல் கொடுக்கவுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராய் ‘இருவர்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், இந்தி, தெலுங்கு, வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக இந்தி படங்களில் தான் நடித்துள்ளார்.

இந்நிலையில், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி சின்ன இடைவெளிக்கு பின் நடித்திருக்கும் படம் Maleficent Mystery of Evil. இந்த படத்தை படக்குழு இந்திய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தி மொழியில் ஏஞ்சலினாவின் கதாபாத்திரத்திற்கு நடிகை ஐஸ்வர்யா ராய் குரல் கொடுக்கவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்