அட்டாளைச்சேனையில் பொலித்தீன் உட்கொண்டு உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

அட்டாளைச்சேனையில் பொலித்தீன் உட்கொண்டு உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

அட்டாளைச்சேனையில் பொலித்தீன் உட்கொண்டு உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

12 Oct, 2019 | 4:08 pm

Colombo (News 1st) அம்பாறை – அட்டாளைச்சேனை, கள்ளப்பாடு பகுதியில் மற்றுமொரு காட்டு யானை உயிரிழந்துள்ளது.

கள்ளப்பாடு பகுதியில் குவிக்கப்பட்டுள்ள குப்பையில் இருந்து பொலித்தீனை உட்கொண்டமையினால் யானை உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கள்ளப்பாடு பகுதியில் பொலித்தீன் உட்கொண்டு உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

இதேவேளை, தம்புள்ளை – அலகொல ஆற்றுப்பகுதியில் பாதுகாப்பற்ற விவசாய கிணற்றில் வீழ்ந்திருந்த யானைக்குட்டியொன்று காப்பாற்றப்பட்டு காட்டிற்குள் விடப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் இருந்த தாய் யானையை விரட்டிய பின்னர் யானைக்குட்டி காப்பாற்றப்பட்டதாக சிகிரியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்